பக்கம்:புதிய கோணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பழைய சிறுகதை

ஊரை அடுத்துள்ள அடர்த்தியான சோலை ஒன்று. சோலையை ஒட்டினாற்போல சலசல என்று நீர் ஓடிக் கொண்டிருக்கின்ற சிறிய ஆறு ஒன்று. அந்தத்தலைவி நாள்தோறும் இந்தச்சோலைக்குத் தான் வருவது வழக்கம். சொல்லி வைத்தாற் போல அவள் வருகின்ற நேரத்தை அறிந்து கொண்டு அந்தத் தலைவனும் அங்கே வருவான். தலைவி தனியே வருவதில்லை என்பது உண்மைதான். அவளோடு சேர்ந்து அவள் உயிர்த்தோழி ஒருத்தியும், சாதாரணத்

தோழிகள் பலரும் சோலைக்கு வருவார்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிச் சாதாரணத் தோழிகளையெல்லாம் சோலையின் பல்வேறு

இடங்களுக்கு அனுப்பிவிடுவாள் தலைவி. உயிர்த் தோழி மட்டும் தலைவியின் கூடவே இருப்பாள்.

நாட்கள் செல்லச் செல்ல இவ்வளவு நெருங்கிப் பழகுகின்ற தோழியைக்கூட அப்பால் செல்லும்படி ஏதோ தந்திரம் செய்துவிட்டாள் தலைவி. தலைவியின் சூழ்ச்சியை அறியாத தோழி தவறு ஒன்றையும் எதிர்பார்க்காமல் அவளைத் தனியே விட்டுவிட்டுச் செல்கின்றாள். சில நேரம் கழித்துத் தலைவியைத் தேடத் தொடங்குகின்றாள் உயிர்த்தோழி, ஒருவாறு கண்டுபிடித்தும் விடுகின்றாள். ஆனால், அந்தச் சோலைக்குள் தலைவியைத் தேட இவ்வளவு அலைய வேண்டுமா என்பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/59&oldid=660025" இலிருந்து மீள்விக்கப்பட்டது