பக்கம்:புதிய கோணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியார் நட்பு 53

பிடித்து, அவள் துயரத்திற்குக் காரணத்தை ஒருவாறு தான் ஊகித்து அறிந்து கொண்டதை எடுத்துக் கூறுகின்றாள். இக்கட்டான நிலைமையில் அகப்பட்டுக் கொண்ட தலைவி இனி உண்மையை மறைக்க முடியாதென்ற நிலையில் ஒருவாறு நடந்தவற்றைக் கூறுகின்றாள். என்ன ஆச்சர்யம்! அவள் எந்தத் தலைவனிடத்தில் ஈடுபட்டாளோ, அந்தத் தலைவனைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது அவளுக்கு எதிர்பாராமல் கிடைத்த சந்திப்பில் முளைத்த அந்தக் காதல் வெகு தூரம் சென்றுவிட்டது. உலகத்தையும் சூழ்நிலையையும் மறந்திருந்த தலைவிக்கு திடீரென்று ஒரு பெரும் தாக்குதல் ஏற்பட்டது. ஒரு நாள் தலைவன் வரவில்லை. காலை வாரார் ஆயினும் மாலை வருகுவர் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். வியப்பினும் வியப்பு. பல நாட்களாகத் தலைவன் வருவது நின்று போய்விட்டது. என்ன என்பதை யாரும் அறிய முடியவில்லை. பிறரிடம் சொல்லித் துயரத்தை ஆற்றிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையும் இல்லை. தன் துயரத்தையெல்லாம் கொட்டுகிறாள் தலைவி.

அந்த நிலைமையில் தலைவனைப் பற்றியும், அவர்களுக்குள் உள்ள தொடர்புகள் பற்றியும் பிறர் யாருக்காவது ஏதாவது தெரியுமா என்று கேட்கின்றாள் தோழி. மிகுந்த துயரத்தோடு தலைவி சொல்லுகிறாள். “தோழி, நாங்கள் சந்தித்ததை யாரும் அறிய மாட்டார்கள். அவரும் நானுமே அறிவோம். அவரே இப்போது பொய் பேசத் தொடங்கினால் நான் என்ன செய்ய முடியும்? நாங்கள் சந்தித்த இடத்தில் ஒரு பறவை மட்டும் இருந்தது. அதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/61&oldid=660028" இலிருந்து மீள்விக்கப்பட்டது