பக்கம்:புதிய கோணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 57

போருக்குச் சென்றிருக்கிறார்கள். ஆக, சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற கால அளவில், தமிழ் நாட்டு வரலாற்றைப் பார்த்தால் ஒயாத, ஒழியாத போரட்டத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஏதோ இடைக்காலத்தில் அமைதியான வாழ்வு இருந்திருக்கிறதே தவிர, மற்றபடி வாழ்க்கையின் குறிக்கோளே போர்தான் என்று நினைக்கக் கூடிய முறையிலே அமைந்திருக்கக் காண்கிறோம். புலவர்களும் போரைப் போற்றிப் பாடியிருக்கிறார் களென்று குற்றம் சாட்டுவதற்கில்லை. ஆனால் ஒருசில புலவர்கள் இதை மிகப் பெரிதுபடுத்திப் பாடியுள்ளதை நினைக்கும்போது, அன்றைய வரலாறு, அந்த மக்களுடைய பண்பாடு எப்படித் தான் இருந்திருக்குமென்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு புற நானூற்றுப் புலவன் பாடுகிறான். தினந்தோறும் போர் நடைபெறும்போது, ஒரு மூதாட்டி முதல் நாள் தன்னுடைய கணவனைப் போருக்கு அனுப்பினாளாம்; மறுநாள் தன்னுடைய தமையனைய் போருக்கு அனுப்பினாளாம்.

“இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்

பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி -

ஒருமக னல்ல தில்லோள்

செருமுக நோக்கிச் செல்கென விடுமே” (புறம்: 279)

என்று பாடுகிறான். இன்றைக்கும் போர்ப்பறை கேட்டதாம்; உடனே இளங் குழந்தையாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/65&oldid=660032" இலிருந்து மீள்விக்கப்பட்டது