பக்கம்:புதிய கோணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் . 59

அடிப்படையில் அந்தப் போர் நடைபெற்றிருக்கும் என்று நினைப்பதே கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். இந்த நிலைமை வருவதற்கு முன்னர், பாரியினுடைய புகழ் நிலைத்து நிற்பதற்குரிய காரனம் இதுவா என்ற ஆராய்ச்சியில் புகுவோமானால், நிச்சயமாக இது இல்லை. இந்தப் போரையொட்டி அல்லது அவன் செய்த மாபெரும் போர்களையொட்டி அவனுக்குப் புகழ் வந்ததென்று நினைப்பதற்கில்லை. அப்படியானால் வேறு செயற்கரிய செயல் என்ன செய்திருப்பானென்று சிந்தித்தோமானால் ஒன்று விளங்குகிறது. -

“செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

செயற்கரிய செய்கலா தார்” (குறள்-26)

என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னார். செயற்கரிய காரியம் ஒன்றைச் செய்திருக்கிறான் பாரி. சாதாரணமாக, மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு, இது என்ன பிரமாதம் என்று நினைக்கக்கூடிய காரியம்தான். ஆனால் சற்று நின்று, நிதானித்து சிந்திப்போமானால் உண்மையிலேயே (}gi[ செயற்கரிய செயல்தான் என்பதை அறிய முடியும். இல்லாவிட்டால், மானுடம் பாடாத சுந்தரமூர்த்தி அடிகள் “கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடி இருப்பாரா? அதற்குத் தகுந்த காரணம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம், சிந்தனையில் ஒர் எண்ண ஓட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/67&oldid=660034" இலிருந்து மீள்விக்கப்பட்டது