பக்கம்:புதிய கோணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புதிய கோணம்

தான் தோன்றுகிறது. சுந்தரமூர்த்தி அடிகள் கர்ணனைப் பற்றி அறியாதவரா? “கொடைக்குக் கர்ணன் என்று உலகமெல்லாம் புகழப்படுகிற கர்ணனை ஏன் பாடவில்லை. சுந்தரர்? ஒருவேளை இந்த வரலாற்றில் அதிகப் பழக்கமில்லாதவராக இருந்திருக்கலாமென்று நினைக்கவும் முடியவில்லை ஏனென்றால், அதே பாட்டில், முதல் அடியில்

“மிடுக்கிலாதானை வீமனே, விறல் விசயனே வில்லுக்கு இவன்’ (திருமுறை: 7, 34, 2)

என்று சொல்கிறார். எனவே நன்றாக பாரதக் கதையை அறிந்திருக்கிறார் சுந்தரமூர்த்திகள், ! |ப்படி அறிந்திருக்கிற அவர் கொடையைப் பற்றிப் பேகம் போது, கர்ணனுடைய பெயரை விட்டு விட்டு,

“கொடுக்கி லாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை’ (திருமுறை 7, 34, 2)

என்று சொல்வாரானால், பாரியினுடைய வரலாற்றிலே நாம் சாதாரணமாக நினைக்கிற கொடை மட்டுமல்லாமல், அதைத் தாண்டிய ஒன்றும் இருக்கிறதென்று நின்ைக்க வேண்டி இருக்கிறது. கர்ணனுடைய கொடைக்கும், பாரியினுடைய கொடைக்கும் ஏதாவது வேறுபாடு காணமுடியுமா என்றால், ஒருவேளை சுந்தரர் கண்டுபிடித்திருப்பாரோ என்று நினைக்கவேண்டி இருக்கிறது. தான் என்ற அகங்கார முனைப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/68&oldid=660035" இலிருந்து மீள்விக்கப்பட்டது