பக்கம்:புதிய கோணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் , 61

கர்ணனுக்கு இருந்ததாகத்தான் நின்ைக்க வேண்டி இருக்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும் கர்ணன் கொடுக்கும்போது, இதைக் கொடுக்கும்படியான பேற்றினைப் பெற்றேன் நான் என்று அந்த நானை’ விடாமல் வைத்துக் கொண்டிருந்தான் என்பதை வில்லி பாடிக் காட்டிக் கொண்டே செல்வார். ஆக அந்த வரலாற்றை நினைக்கும் போதெல்லாம் சுந்தரர் எத்துணை கொடைச் சிறப்பில் சிறந்தவனாயினும், அகங்கார மமகாரத்திலிருந்து அவன் விடுபடவில்லை என்ற காரணத்தினால் அவனுடைய பெயரை விட்டு விட்டாரென்று நினைக்க வேண்டியிருக்கிறது. பாரியைப் பொறுத்தமட்டில் அத்தகைய பெயருக்கு இடமில்லாமல், நான் என்ற ஒரு பொருளே அவனிடத்தில் இல்லையோ என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அவனுடைய வாழ்வு நடைபெற்றதால் தான், “கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை’ என்று சுந்தரர் பாடியிருக்கிறார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

காலமறிந்து, இடமறிந்து, யாருக்குக் கொடுக்கிறோம் என்று அறிந்து கொடுக்கப்படுவதை பழந்தமிழர் கொடை என்று சொல்லுவதேயில்லை காலம், இடம் இரண்டையும் மறப்பதோடுகூட, யாருக்குத் தருகிறோமென்ற நினைவே இல்லாமல் தருவதுதான் கொடை என்று சொன்னார்கள். கொடுத்தல் மிக உயர்ந்தது என்பதைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/69&oldid=660036" இலிருந்து மீள்விக்கப்பட்டது