பக்கம்:புதிய கோணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புதிய கோணம்

கிடைக்குமென்று செய்யவில்லை. பின் ஏன் செய்தான்?

“ஆங்குப்பட்டன்று அவன் கை வண்மை’ (புறம்: 134)

அது அவனுக்குப் பழக்கமாகிவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இவ்வளவு சிறப்புக் களையுடைய பாரியின் வரலாற்றை நாம் அறிவதற்கு வாய்ப்பே இல்லை. பழங்கால மன்னர்களுடைய வரலாற்றை அறிய தமிழகத்திலே முறையான வரலாறுகள் எழுதப்படவில்லை. பேரரசர்களுடைய வரலாற்றைக்கூட அறிய வேண்டுமானால், புறப் பாடல்கள் முதலியவைகளிலே புலவர்கள் பாடிய ஒரிரு சந்தர்ப்பங்களைத் தவிர பெரு மன்னர்களைப் பற்றிக்கூட நாம் ஒன்றும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. பெருமன்னர்களைப் பற்றிக்கூட ஒன்றும் அறிய முடியவில்லையென்றால் பாரி போன்ற சிற்றரசர்களைப் பற்றி அறிய நிச்சயமாக வாய்ப்பே கிடையாது. ஆனால் ஒருசில புலவர்கள் வள்ளல்களையும், அரசர்களையும் சென்று, பாடும் போது, அவர்களுடைய வாழ்க்கையிலே நடந்த பல்வேறு சம்பவங்களைச் சுட்டிப் பாடுவதாலே, சரித்திரத் துணுக்குகள் என்று சொல்கிறோமே, அது போல வரலாற்றுத் துணுக்குகளாக ஒரு சில நிகழ்ச்சிகளை நாம் காணமுடியும். பாரியைப் பொறுத்த மட்டில், அவன் செய்த மாபெரும் நற்பேறு காரணமாக சங்க இலக்கியப் புலவர்கள் வரிசையிலே, ஒப்புவமை இல்லாதவராகிய மாபெரும் புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/72&oldid=660040" இலிருந்து மீள்விக்கப்பட்டது