பக்கம்:புதிய கோணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புதிய கோணம்

என்று பேசுவார். வாய்மொழி என்றால் சத்தியம் பேசுகின்றவர் என்பது ஒரு பொருள். இது இல்லாமல் ஆழ்ந்த பொருளும் ஒன்று இருக்கிறது. வேதத்திற்கே ‘வாய்மொழி’ என்று பெயர் வழங்கப்படுவதை பரிபாடலில் காண்கிறோம். “வாய்மொழி ஓடையில் மலர்ந்து” என்ற பரிபாடலில் வாய்மொழி என்பது வேதமென்று பேசப்படுகிறது. எனவே வாய்மொழிக் கபிலன் என்றால், “புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று சொல்லப்படுகிற காரணத்தாலே, வேதமறிந்த அந்தணர் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இனி, பெருங்குன்றுார்கிழார் என்ற புலவர், பதிற்றுப்பத்து 85-ஆம் பாடலில் மறுபடியும் கபிலரைப் பற்றிப் பேசுகிறார். -

 அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய

மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் • கபிலன்.--” (பதிபத்து 85)

கபிலரைக் கண்டவுடன் எந்த அரசவையும் பணிந்து ஏற்றுக் கொள்ளுமாம். காரணம், “அறம்புரிந்து வயங்கிய மறம்புரிக் கொள்கை உடையவன்.” அறத்தின் அடிப்படையில், விரத்தோடு வாழ்க்கை நடத்தினார் என்றால், இச்சகம் பேசாதவர்; யாரையும் தேவையில்லாமல் பொய் கூறிப் புகழ்ந்து பேசாதவர் என்ற உண்மை வெளிப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/74&oldid=660042" இலிருந்து மீள்விக்கப்பட்டது