பக்கம்:புதிய கோணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் . 69

கபிலன்பாடிவிட்டான்; “இரந்துசென் மாக்கட் கினியிட மில்லை”. அவனிடத்தில் பரிசில் வாங்க வேண்டும்; அவனுடைய புகழ் LITTL வேண்டுமென்று செல்கிறவர்களுக்கு இனி இடமில்லை. ஏன்? “புலனழுக் கற்ற அந்தணுளன்” பாடிவிட்டான் என்று அற்புதமாகப் பாடிச் செல்கிறார்.

இனி, சோழிய ஏனாதி திருக்கண்ணனைப் பாடும் போது,

“மல்ல னன்னாட் டல்ல lரப் பொய்யா நாவிற் கபிலன் பாடிய”

என்று பாடுகிறார். இந்த அடிகளை வைத்துக் கொண்டு பார்த்தோமானால், கபிலருக்கு ஏனைய புலவர்கள் தருகின்ற அடைமொழிகளில் மிக முக்கியமானது, “பொய்யா நா'’ , ‘செந் நா'’ என்ற இரண்டாகும். செந் நா, பொய்யா நா என்றால் ஒரே ஒரு பொருள் தான் உண்டு. தேவையில்லாமல், உண்மைக்கு மாறாக, பரிசிலைக் கருதியோ, வேறு நலன்களைக் கருதியோ, பொய் பேசுகின்றவர் அல்லர் என்ற பேருண்மை விளங்குகிறது. நான்கு புலவர்கள் பாடியதைக் கண்டோம். நான்கு புலவர்களிலே, நக்கீரனும், பொருந்திலிளங்கீரனாரும், கபிலரை புகழுடைய புகல் என்று சொல்கிறார்கள். மாறோக்கத்து நப்பசலையாரும், பெருங்குன்றுார் கிழாரும், r

“நல்லிசைக் கபிலன்’, “பரந்திசை நிற்கப் பாடினன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/77&oldid=660045" இலிருந்து மீள்விக்கப்பட்டது