பக்கம்:புதிய கோணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புதிய கோணம்

என்று பாடுகிறார்கள். இந்த இரண்டு அடிகளையும் வைத்துக்கொண்டு பார்த்தோமானால், இசை என்ற சொல் ஒருவன் வாழ்கின்ற காலத்திலே வருவதே தவிர, பின்னர் வருவதல்ல என்பது தெரிகிறது. இரண்டு புலவர்கள் “இசையுடைய கபிலன்” என்று சொல்வார்களானால் அவர்கள் காலத்தில் கபிலன் வாழ்ந்தான் என்பது பொருளாயிற்று. இனி நக்கீரனும், பொருந்தில் இளங்கீரனாரும் “புகழ்க்கபிலன்’ என்று பாடினார்கள். எனவே அவர்கள் காலத்தில் கபிலன் இல்லையென்று நினைக்கத் தோன்றுகிறது. கபிலராகிய ஒப்பற்ற பெருமகன் சங்க இலக்கியம் இன்று கொடுக்கின்ற எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய தொகை நூல்களில் 235 பாடல்கள் பாடியிருக்கிறார். இவரையொத்த புலவர் யாருமில்லை. அடுத்து உள்ளவராகிய அம்மூவனார் என்பவர் 127 பாடல்கள் தான் பாடியிருக்கிறார். உம்மைத்தொகைக்கு இலக்கணக்காரர்கள் உதாரணம் காட்டக்கூடிய அளவுக்கு கபிலபரணர் என்று சொல்லப்படுகின்ற பரணர்கூட 85 பாடல்கள்தான் பாடியிருக்கிறார்.

பத்துப்பாட்டுள் அவருடைய பாட்டு குறிஞ்சிப் பாட்டு என்று சொல்லப்படும். அந்தக் குறிஞ்சிப் பாட்டின் அடியிலே இருக்கிற குறிப்பு மிகமிக ஆழமான வரலாற்று உண்மையை அறிவிப்பதாகும். ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ்ச் சுவையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/78&oldid=660046" இலிருந்து மீள்விக்கப்பட்டது