பக்கம்:புதிய கோணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புதிய கோணம்

அடுத்தாற்போல், நாம் சிந்திக்க வேண்டியது, அன்று முதல் இன்று வரையில் வாழ்கின்ற ஒரு பழமொழியேயாகும். “குறிஞ்சி பாடக் கபிலன்” என்ற ஓர் அற்புதமான பழமொழி வழங்கி வருகிறது. அகத் திணையிலே உள்ள ஐந்து பிரிவுகளுள் குறிஞ்சி என்பது ஒன்று. ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி’ என்று சொல்லுவார்கள். அந்தக்குறிஞ்சி ஒன்றையே பெரிதாகப் பாடியிருக்கிறார் கபிலர் என்று நினைக்கும் போது கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. எத்துணைச் சிறப்புடைய புலவர் களாயினும், ஒரே பகுதியைப் பற்றிப் பலரும் பாடத் தொடங்கினால், அங்கே ‘கூறியது கூறல்” என்பது வரத்தான் செய்யும். இது இயல்பு. அதிலும் ஒரே புலவன், ஒரே திணையைப்பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடினான் என்றால், ஒருவேளை கூறியது கூறல்” என்ற குற்றம் வந்துவிடுமோ என்ற மனத்துடனேயே நாம் கபிலரைப் படித்துப் பார்த்தால்தான் அவருடைய புலமையின் நயம் நன்கு விளங்குகின்றது. ஒரு பாடலிலே சொல்லப்பட்ட கருத்து மற்றொரு பாடலிலே மறந்தும் காணப்படாத அளவுக்கு, மிகப் பெரியதொரு அற்புதமான உலகத்தைக் கற்பித்துக்காட்டுகிற சிறப்பினை உடைய புலவர் கபிலர். “குறிஞ்சி பாடக் கபிலர்’ என்ற பழமொழி இதனை அடியொற்றித்தான் பிற்காலத்தில் யாராலோ செய்யப்பட்டிருக்கிறது. இப்படி அகத்திணையில், குறிஞ்சிப் பாடல் பாடுவதில் வல்லவர் என்றால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/80&oldid=660049" இலிருந்து மீள்விக்கப்பட்டது