பக்கம்:புதிய கோணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 73

புறத்திணையில் பாடல்கள் சுமாராக இருக்குமோ என்று யாரும் சந்தேகம் கொள்ள வேண்டிய தேவையில்லை. பதிற்றுப் பத்தில், செல்வக்கடுங்கோ வாழியாதான் என்ற சேர மன்னனை, பாரி இறந்த பிறகு, சென்று கண்டு, அவனைப் பத்து பாடல்கள் பாடி, நூறாயிரங் காணம் பரிசிலும், நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் பரிசிலாகப் பெற்றாராம் கபிலர் என்றால், குறிஞ்சி பாடுவதிலே மட்டுமல்ல; புறத்திணை பாடுவதிலும் ஒப்பற்றவராக இருக்கின்றார் கபிலர் என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. சேர மன்னனாகிய செல்வக்கடுங்கோ வாழியாதன் முடியுடை மன்னர்கள் மூவரில் ஒருவனாகிய சேர மன்னன். பாரி இறந்த பிறகு, அவனைச் சென்று கண்டிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே பாரியினுடைய சிறப்பைச் சொல்லித் தான் பாடுகிறார் பதிற்றுப் பத்தில் என்றால் பாரியைக் கொன்ற மூவேந்தர்களில் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஒருவனாக இருக்க முடியாதென்ற நினைவு தோன்றத்தான் செய்கிறது. இவ்வளவு சிறப்புடையவர் ஆகிய கபிலர், பாரியைப் பொறுத்த மட்டில் 17 பாடல்கள் பாடியுள்ளார். அந்தப் பதினேழுபாடல்களுள், வேள் பாரியைப் பற்றி 7 பாடல்களும்; பாரியின் பறம்பு நாட்டைப் பற்றி 4 பாடல்களும்; அவனுடைய பறம்பு மலையைப் பற்றி 4 பாடல்களும் இருக்கின்றன. இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, இதனோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/81&oldid=660051" இலிருந்து மீள்விக்கப்பட்டது