பக்கம்:புதிய கோணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புதிய கோணம்

தொடர்புடையதாகிய ஒரு சில பாடல்களும் பின்னாலே வருகின்றன, அவற்றையும் வைத்துக் கொண்டு பார்த்தோமானால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிற்றரசனாகிய பாரியினுடைய நாட்டு வளம் என்ன? மலை வளம் என்ன? மக்கள் வளம் என்ன? என்பதை அந்தப் பாடல்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். மனிதனாகிய பாரியைப் பற்றிப் பாட வந்த கபிலர் பெருமான், அந்த நாட்டு மக்கள் வாழ்கிற வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டுகிறார். அந்தநாட்டைப் பற்றிச் சொல்கிறார். - - - .

“நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல

நாட வளந்தரும் நாடு” (குறள்-739)

என்று திருக்குறள் பேசுவது போல, அந்த நாடு நாடாத வளம் உள்ளதாக அமைந்துள்ளதென்று மிக அற்புதமாகக் காட்டுகிறார். அந்தப் பாடல், இன்று நாம் மிகமிக அதிகமாகச் சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. மழை இல்லையாம். எந்த நிலையில் மழை இல்லை என்பவதைக் கபிலர் பெருமான் மிக அற்புதமாகக் காட்டுகிறார். சனிக்கோளைச் கற்றி கோட்டை கட்டிவிடுமாம், புகை மூட்டம் தோன்றுமாம், தூமகேது எனப்படும் வால்மீன்கள் பல தோன்றுமாம், வெள்ளி என்று சொல்லப்படும் சுக்கிரன் தென் திசையில் அதிக தூரம் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/82&oldid=660052" இலிருந்து மீள்விக்கப்பட்டது