பக்கம்:புதிய கோணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 75

விடுமாம். இந்நிலை ஏற்பட்டால் பெரும் பஞ்சம் தோன்றும் என்று புறப்பாடல் பேசுகிறது. அப்படிப்பட்ட காலத்தில்கூட பறம்பு நாட்டில் “பெயல் பிழைப்பறியாது’ - உலகம் முழுவதும் பஞ்சம் இருக்கலாம்; ஆனால் பறம்பு நாட்டில் மழை குறைவதில்லை. கன்று ஈன்று பசுக்கள் புல் மேய்வதற்குப் போதுமான புல் நிறைந்துள்ளதாம். பாரியினுடைய செங்கோல் காரணமாகச் சான்றோர்கள் நிறைந்து உள்ளனராம். பூனைக் குட்டியின் பல் வரிசை போன்று முல்லைப் பூக்கள் பூத்திருக்கின்றனவாம் பறம்பு நாட்டில், இத்தனையும் சொல்கிறார் புலவர், எப்போது? பாரி இறந்த பிறகு. இவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து, இத்துணை வளம் உடையதாகிய இந்தப் பறம்பு நாடு இன்றைக்கு என்ன துரதிருஷ்டமான நிலையை அடைந்து விட்டதென்ற கருத்தில் பாடுகிறார்.

“மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும் தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் வயலக நியைப் புதற்பூ மலர மனைத்தலை மகவை யீன்ற வமர்க்கண் ஆமா நெடுநிரை நன்பு லாரக் கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப் பெயல்பிழைப் பறியாப் புல்புலத் ததுவே பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும் x ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே’ (புறம்: 17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/83&oldid=660053" இலிருந்து மீள்விக்கப்பட்டது