பக்கம்:புதிய கோணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புதிய கோணம்

கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக நிலம்புதைப் பழுனிய மட்டின் றேறல் புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப் பெருந்தோ டாலம் பூசன் மேவர வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ’ (புறம்: 20)

எவ்விதமான சிரமும் இல்லாமல் இவ்வளவு பெரிய வருவாயைப் பெற்று இருந்ததே பறம்பு நாடு; அது இனி என்னவாகுமோ என்று பாடுகிறார். அதை விடச் சிறப்பு, மாபெரும் அந்தணராகிய கபிலர் பெருமான் சொல்லுகின்ற உணவு முறை நம்மை

வியப்பில் ஆழ்த்துகிறது. சிவந்த நிறமுடைய, புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப் பிடித்து, புளிப்பு ஏறாத மோருடன் சேர்த்து ஒருவகைப் புளிக்கறி செய்கிறார்களாம்.

‘செம்புற் றீயலி னின்னளைப் புளித்து’’ (புறம்: t9)

சுவைத்துத்தான் பாடுகிறார். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இதனை அடுத்த நான்கு பாடல்களிலே தலைநகரைப் பற்றிப் பேசுகிறார். இன்றைக்கும் செல்கின்றவர்கள் பறம்பு மலையில் பார்க்க முடியும் உயரமான, வளப்பம் மிகுந்த மலை. மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் கவலை இல்லையாம். - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/86&oldid=660056" இலிருந்து மீள்விக்கப்பட்டது