பக்கம்:புதிய கோணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 79

“பெய்யினும் பெய்யா தாயினு மருவி

கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக’ (புறம்: 05)

கொள் விதைப்பதற்காக உழுதிருக்கிறார்களே, அந்த ஒரு சால் காலாக,

“மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்’

(புறம் 105)

பக்க மலைகளிலிருந்து தண்ணிர் ஊற்றிக் கொண்டே வரும். அப்படிப்பட்ட அருவிகளையுடைய பறம்பு மலை என்று பேசுகிறார். இனி பறம்பு மலையை விட்டு நீங்கிச் செல்லும் துர்ப்பாக்கியமான நிலை. பாரி மறைந்த பிறகு, அவனுடைய இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு செல்கிறார் புலவர். துரத்திலிருந்து பறம்பு மலையைப் பார்க்கிறார். எப்படிப்பட்ட பறம்பு மலை தெரியுமா, அது? அங்கே பாரி வாழ்ந்த காலத்திலே, மது இருந்த சாடியின் மூடி திறந்தே இருக்கும்; ஆட்டுக்கடா சமையலுக்காக ஓயாது வெட்டப்படும்; எப்போதும் சமைத்து முடிவு பெறாத ஊன் சோறும், கோவையான துவையலும் வேண்டுவோர்க்கெல்லாம் எப்போதும் தரும் பறம்பு மலையாயிற்றே நீ மலையே! இதுவரை என்னுடைய இனிய நண்பனுக இருந்தாய்; பாரி மாய்ந்துவிட்டான்; மனங்கலங்கிச் செய்வதறியாது ஒழுகுகின்ற கண்ணிருடன் உன்னை வணங்கிவிட்டு, இதோ புறப்படுகிறோம்; ஏன் தெரியுமா? பாரியின் பெண்களாகிய இவ்விரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/87&oldid=660057" இலிருந்து மீள்விக்கப்பட்டது