பக்கம்:புதிய கோணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புதிய கோணம்

வரையும் மணம் முடிக்கக்கூடிய கணவன்மார்களைத் தேடிச் செல்கிறோம், பறம்பே, நீ வாழ்வாயாக என்ற கருத்தில் பாடுகிறார்.

“மட்டுவாய் திறப்புவு மைவிடை வீழ்ப்பவும்

அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டங் கீயும் பெருவளம் பழுனி நட்டனை மன்னோ முன்னே யினியே பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர் நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே” (புறம் 13)

இறுதி இரண்டு அடிகளிலுள்ள அவலச் சுவையை நினைக்கும்போது துணுக்குறாமல் இருக்க முடியவில்லை. அவர் போகின்றார். கொஞ்ச துரம் போனதும், நின்று பார்க்கிறார். மனித இயல்பு அல்லவா! பல நாள் வாழ்ந்த ஊரைவிட்டுப் பிரிந்து செல்வதானால், எத்தகையவர்களுக்கும் மனத் துணுக்கம் ஏற்படத்தான் செய்யும். கொஞ்ச தூரம் சென்றவுடன் திரும்பிப் பார்க்கிறார். மறுபடியும். பறம்பு மலை தெரிகிறது. குழந்தை உள்ளம் மகிழ்ச்சியிலே துள்ளுவதுபோல, .

“ஈண்டு நின் றோர்க்குந் தோன்றுஞ் சிறுவரை - சென்றுநின் றோர்க்குந் தோன்றும்’ (புறம்: 114)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/88&oldid=660058" இலிருந்து மீள்விக்கப்பட்டது