பக்கம்:புதிய கோணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 83

முன்னே வந்து குப்பை மேட்டிலே ஏறிக்கொண்டு கீழே செல்லுகின்ற உப்பு வண்டிகளை எண்ணுகிறார்களாம். இதை நினைக்கிற என் நெஞ்சு வெடிக்கிறதே என் உயிர் ஏன் போகவில்லை என்று கண்ணிர் விடுகின்றார் புலவர் பெருமான்.

‘பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும்

பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந் துகளவும் கலையுங் கொள்ளா வாகப் பலவும் கால மன்றிய மரம்பயம் பகரும் யாண ரறாஅ வின்மலை யற்றே அண்ண னெடுவரை யேறித் தந்தை பெரிய நறவிற் கூர்வேற் பாரிய தருமை யறியார் போரெதிர்ந்து வந்த வரம்படு தானை வேந்தர் பொலம்படைக் கலிமா வெண்ணு வோரே (புறம்: 16)

‘வலம்படு தானை வேந்தர் பொலம்படைக் கலிமா’’

வெற்றி பெறலாமென்று மேலே ஏறி வந்த மன்னர் களுடைய, பொன்னாலாகிய ஆபரணங்களையுடைய குதிரைகளை எண்ணுகிறார்கள். இன்று என்ன நடைபெறுகிறது தெரியுமா?

“தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்

கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல் ஏந்தெழின் மழைக்க ணின்னகை மகளிர் புன்மூசு கவலைய முண்மிடை வேலிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/91&oldid=660062" இலிருந்து மீள்விக்கப்பட்டது