பக்கம்:புதிய கோணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவன் கண்ட இன்பம் 89

பெயரளவில் அனுபவிக்கப்படுகிறதே தவிர முழுத் தன்மை பெற்றதாக இருப்பதில்லை.

இத்துணைக் கருத்துக்களையும் உள்ளடக்கி ஒரு குறளை வள்ளுவர் பேசினார் என்றால், அதுவே அவருடைய நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழ் மொழியிலுள்ள அகநூல்கள் பிற மொழிகளைப் போல் ஆண், பெண் தொடர்புபற்றி அதிகம் கூறாமல், காதல் உலகின் அடிப்படையில் உள்ள மன வளத்தையே பெரிதும் பேசிச் செல்வது கண்கூடு. அதிலும் சிறப்பாக, வள்ளுவருடைய காமத்துப்பால், ஒருவன் ஒருத்தி என்ற இருவர் எதிர்ப்பட்டு, ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்பட்டுப் பழகி, களவு வாழ்க்கை நடத்தி, பின்னர்க் கற்பில் புகுந்து வாழ்க்கை நடத்துகின்ற வரையில் ஒரளவு மரபை அடியொற்றிச் செல்கின்றது எனினும், ஆழ்ந்து நோக்கினால் களவு, கற்பு ஆகிய இரு நிலைகளிலும்

தலைவன், தலைவி என்ற இருவருடைய மனநிலைகள், எண்ணா ஒட்டங்கள், எண்ணப் போராட்டங்கள், ஒருவரையொருவர் அறிந்து

கொள்ள முயலும் மனநிலை, அவ்வாறு அறிந்த பின்னர் ஒருவருடைய பெருமையை மற்றவர் அறிதல், அதனை அறிந்த பிறகு ஒருவர் ஒருவரில் கலந்து பூரணமாகத் தம்மை அவரிடம் தியாகம். செய்து விடுதல் ஆகியவற்றையே கூறிச் செல்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/97&oldid=660068" இலிருந்து மீள்விக்கப்பட்டது