பக்கம்:புதிய கோணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புதிய கோணம்

வள்ளுவரும் ஏனையோர் போல் காமத்தைக் கண்டிருப்பின் அதற்கு அடியிற் கூறியவாறு ஒர் இலக்கணம் வகுத்திருத்தல் இயலாது.

‘அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு’ (குறள்-ii0)

பல்லாண்டுக்காலமாக ஒருவன் ஓர் இலக்கியத்தைத் திரும்பத் திரும்பப் பயில்கின்றான். எனின் அதன் அடிப்படை யாது? அவன் வயதும் அனுபவமும் ஏற ஏற அப்பழைய நூலில் முன்னர்க் காணாத புதுமையை அறிகிறான், அவ்வாறு அறிகையில் இதுவரை அப்பொருளை அறியாதிருந்த தன் அறியாமையையும் உடன் அறிகிறான். எனவே ஒவ்வொரு முறை கற்குந்தோறும் காணப்பெறும் புதிய நயத்தையும், முன்னர் காணமுடியாதிருந்த தன் அறியாமையையும் அறிகிறான். இந்த உவமையைப் பயன்படுத்திப் பெருந்தகை தலைவியிடம் முழுக்காதலுடன் வாழும் தலைவனின் இயல்பை வெளியிடுகிறார். ஒருத்தியிடம் பல்லாண்டு வாழ்ந்தும் கூட ஒவ்வொரு நாளும் அன்று வரை காணாத ஒர் இயல்பை அல்லது இன்பத்தைக் காண்கிறான் தலைவன் எனின் இது உடல் பற்றியதன்று என்பதும் உள்ளுணர்ச்சி பற்றியதே என்பதும் நன்கு விளங்கும்.

உடற்புணர்ச்சி அடிப்படையில் காமம் பேசிய பிறரும், உள்ளப்புணர்ச்சி அடிப்படையில் காமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/98&oldid=660069" இலிருந்து மீள்விக்கப்பட்டது