பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 "அப்பசுக்கள் கிறையக் கறக்குமா? ஆண்டொன்றிற்கு பசுவொன்று காலா யிரத்து இருநூற்று அறுபது கிலோகிராம் பால் கொடுக்கிறது.” காட்பஸ் கெளண்டியிலுள்ள எல்லாக் கூட் டுப் பண்ணைகளும் சேர்ந்து ஆண்டு தோறும் நாலாயிரம் டன் பாலும், தொண்ணுாற்று ஐந்து டன் இறைச்சியும் பதினுறரைக் கோடி முட்டை களும் கொடுக்கின்றன.

  • அதிக வெண்ணெய் உண்பதில் நாங்களே உலக வீரர்கள்', என்று சிரித்துக் கொண்டே கூறினர், பண்ணையின் தலைவர்.

உங்கள் ஆண்களையும் பெண்களையும் பார்த் தாலே, அது தெரிகிறது", என்று சொல்ல, வாயெடுத்தேன். சமாளித்து அடக்கிக் கொண் டேன்.

பண்ணைகளைப் பெரும் கூட்டுப் பண்ணை களாக்கி, இயந்திரங்களைக் கொண்டு விஞ்ஞான அடிப்படையில் பயிரிடுவதால், நிறைய விளை கிறது; உற்பத்தி அதிகமாகிறது. அதைப் பண மாகக் கணக்கிட்டுப் பார்த்தால், உங்கள் பண்ணை யின் ஒவ்வொரு உறுப்பினருக்கு, எவ்வளவு கிடைக்கும்?' என்று கேட்டேன்.
இப்பண்ணையில், .ெ சாங் த நிலங்களைக் கொண்டு வந்து இணைத்தவர்களும் உழைப்பை மட்டுமே இணைத் தவர்களும் இருக்கிருர்கள்.