பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 "விளைபொருள்களை விற்று வரும் தொகை களே வரவு வைக்கிருேம். செலவினங்களைச் சேர்த்து மொத்த வருவாயில் கழிக்கிருேம். மிச் கம் வருவதே ஆதாயம். ஆதாயத்தில் ஒரு பங்கை அரசுக்குக் கட்டி விடுகிருேம். ஒரு பங்கை, வருங் கால முதலிடுகளுக்காக ஒதுக்கி வைப்போம். பாக் ப்ெ பணத்தைக் கூ ட்டுப்பண்ணை உறுப்பினர் களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்போம். 'முதலில் எல்லா உறுப்பினர்களுக்கும் அவர வர் உழைப்பிற்காக மாதச் சம்பளம் போட்டு அதைக் கொடுத்து விடுவோம். அதுபோக, கிலத் தோடு வந்த உறுப்பினர்களுக்கு, அவரவர் நிலப் பரப்புக்கு ஏற்ப, பங்கு பிரித்துக் கொடுக்கிருேம். பிரிவுத் தொகை பண்ணைக்குப் பண்ணை வேறுபட லாம். ஹெக்டருக்கு ஆண்டுக்கு ஐந்து மார்க்கே பங்குப் பணம் கொடுக்கும் பண்ணைகள் சில எண்டு. இந்த கார்ல்மார்க்ஸ் பண்ணையில் ஹெக் டருக்கு ஐம்பது மார்க்குகள் தருகிருேம். "மாதச் சம்பளத்தையும் பங்குப் பிரிவையும் கொடுத்த பிறகு மிச்சமிருப்பதை போனஸ்ாகக் கொடுப்போம். இத்தொகையும் பண்ணைக்குப் பண்ணை வேறுபடக்கூடும். நிறைய உற்பத்தி யிருந்தால் நிறைய போனஸ் கிடைக்கும்.' "ஒராண்டில் விளைச்சல் எப்படியோ குறைந்து விட்டது, ஆதாயம் இல்லை. கைப்பிடிப்பு ஏற்பட் டது என்ருல் என்ன செய்வீர்கள்??