பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 போனஸ் இராது. பிரிவுப் பணம் குறையும் சம்பளமும் குறையலாம்.' போனலை பணமாகக் கொடுப்பீர்களா? பொருளாகக் கொடுப்பீர்களா?” இரு வகையிலும் போனஸைக் கொடுப் போம்.' பயிர் வகைகளை இன்ஸ்யூர் செய்கிறீர் 35ύτπ? -*. எல்லாப் பண்ணை விளைச்சலையும் இன்ஷ் யூர் செய்ய வேண்டுமென்பது எங்கள் சட்டம். சட்டப்படியே கடக்கிருேம்” என்ருர்.

இந்தக் கூட்டுப் பண்ணையைச் சேர்ந்தவர் களின் சராசரி வருமானம் எவ்வளவு?' --

ஒவ்வொருவருடைய சராசரி வருவாய் ஆண் டிற்கு ஒன்பதாயிரம் மார்க்குகள்' என்ருர். அதாவது பதினெட்டாயிரம் ரூபாய்கள். மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய்கள். இதைக் கேட்ட எங்களுக்குக் குடியானவர் ஒரு வருடைய வீட்டைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எழுந்தது. அதை வெளியிட்டோம். எங் கள் விருப்பப்படி அருகிலிருந்த குடியானவர் ஒரு வருடைய விட்டிற்கு அழைத்துச் சென்ருர்கள். அந்த வீடு, மாடி விடு. சுற்றிலும் காய்கறித் தோட்டம்; கான்கைந்து ஆப்பிள் மரங்கள்.