பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 'இன்று எங்கள் முக்கிய தேவை மக்கட் செல்வம். ('உலகத்தில் சில காடுகளில், குடும்பக் கட்டுப் பாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. எங்கள் காட் டிற்கு இப்போது, குடும்பப் பெருக்கம் தேவை. இதை ஊக்குவிப்பது எங்கள் திட்டங்களின் ஒரு கூறு', என்று கேஷர் கூறினர். இடை இடையே கேள்வி கேட்பதே பேசுபவ ருக்கு துண்டுகோலாயிருக்குமென்று கருதினேன். 'குடும்பப் பெருக்கத்திற்கு என்ன செய்கிறிர் கள்?' என்று கேட்டேன். வாலிபர்களே, திருமணஞ் செய்து கொள்ள வும், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஊக்கு விக்கிருேம். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட வர்கள், தனிக் குடித்தனம் கடத்துவதற்கு உதவி யாக, அவர்களுக்கு ஐயாயிரம் மார்க்குகள் முன் பனம் கொடுக்கிருேம். அப்பணத்தைக் கொண்டு, குடித்தனத்திற்கு வேண்டிய பொருள்களையும் தன் வாடங்களேயும் வாங்கிக் கொள்ளலாம். அத் தொகைக்கு வட்டி கிடையாது. முதலேக்கூட திருப் பித் தரவேண்டியதில்லை. எப்போது தெரியுமா? 'முதல் குழந்தை பெற்றதும், அ ஆயிரத்து ஐநூறு மார்க்குகளைத் தள்ளிவிடுவார்கள். இரண் டாம் குழந்தை பிறந்தால், மேலும், ஆயிரத்து ஐநூறு மார்க்குகள் தள்ளுபடி. மூன்றும் குழந்தை யைப் பெற்றுவிட்டால், மொத்தப் பணமும் தள்ளு படி' என்ருர்.