பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 மேனுட்டு ஒட்டல்களில், உணவை அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடிவிட முடியாது. உணவுப் பண்டங்களை ஒவ்வொன்ருகக் கொண்டு வருவார்கள். இல்லாவிட்டால் ஆறிப் போகும். சாதாரணமாக சாப்பாட்டுக்கு ஒரு மணிக்கு மேல் செலவாகும். லேப்சிக்கில் சாப்பாட்டை முடித்ததும், அடுத்த கி. க ழ் ச் சி க் கு விரைய வேண்டியதாயிற்று. இடையில் எங்களில் சிலர் தங்கள் அறைக்கு 'விரைந்தோடினர். பேருந்து ஒட்டியும் தன் அறைக்கு விரைந்து சென்று வந்தார். அப்போது தான், அவரும் எங்கள் மாடியிலேயே, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே மாதிரி அறையில் தங்கி யிருக்கிருர் என்பதைக் கவனித்தேன். அது சற்று வியப்பாயிருந்தது. அவ்வியப்பை இ க் தி ய த் தோழர் ஒருவரோடு காதும் காதும் வைத்தாற் போல் சொன்னேன். அவர் ஏற்கனவே காட்பஸ் ஒட்டலில் தங்கியிருந்த போது இதைக் கவனித்த தாகவும் சமதர்ம சமுதாயத்தின் சிறப்பில் ஒன்று அதுவென்றும் விளக்கினர். லேப்சிக்கில் தங்கியிருந்த போது மற்ருெரு தகவலையும் தெரிந்து கொண்டேன். லைப்சிக் என்னும் ககரம் உலகச் சங்தை கடக்கு மிடம். ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் சங்தை கூடும். உலகத்தின் பல நாடுகள் தங்கள் பொருள்களைக் கொண்டு