உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 'மூன்று பேரே, உழவர், தொழிலாளர் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். o அங்த ஏகபோகத்தை புதிய ஜெர்மனி, திட்ட மிட்டு மாற்றி விட்டது.' உழவர்களே ! தொழிலாளர்களே வாருங் கள் பல்கலைக்கழகத்திற்கு உங்களுக்கும் உரியது உயர் படிப்பு. உங்களுக்கும் கன்மையானது உயர் படிப்பு ' என்று புதிய ஜெர்மனியின் தேசிய முன் னணிக் கட்சி வேண்டுகோள் விடுத்தது. தேசிய முன்னணியே ஆளுங் கட்சி. வேண்டுகோள் வீண் போகவில்லை. உழவர் களும் தொழிலாளர்களும் உயர்கல்வி பெற முன் வந்தனர். அவர்களுக்கு மறு பயிற்சி அளிக்கவும் பொது அறிவு தரவும் உதவும் வகையில் பாட முறைகள் உருவாயின. அவர்களுடைய வாழ்க்கை யோடு தொடர்புடைய பாடமுறைகள் தோன்றின. * உழவர் தொழிலாளர் கல்விப் பிரிவு, பல்கலைக் கழகத்தின் குறிப்பிடத்தக்க பிரிவாக உருவெடுத் தது.'

  • உழவரும் தொழிலாளரும் பல்கலைக்கழகத் தில் சேர்ந்த ஆர்வத்தோடு இடையருது கற்று தேர்ச்சி பெற்ருர்களா?' என்று இடைமறித்தேன்.

- *ஆம். 1949இல் கானுாற்று நாற்பது பாட்டா வளிகள், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை வெற்றி கரமாக முடித்தார்கள்.