பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 அப்பெரு நகரத்தின் பெயர் என்ன? பாட்ஸ்டாம் என்பது அங்ககரின் பெயர். அது வரலாற்றுச் சிறப்புடையது. பண்டைக்காலத்தில், பிரஷ்ஷிய மன்னர்களின் தலைநகராக இருந்தது. இப்போது? ஜெர்மனிய ஜனநாயகக் குடியரசில் உள்ள பதினைந்து கெளண்டி (பிராங்திய) களில் ஒன்ருகிய பாட்ஸ்டாம் கெளண்டியின் தலைநகராக மட்டும் இருக்கிறது. -

பதினைந்து தலைாககரங்களில் ஒன்ருக மட்டும் இருக்கும் இவ்வூருக்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே என்ன சிறப்பைக் காணப் போகிருேம்?" இக் கேள்விகளைக் கேட்டேன்.

பதில் என்ன? "இரண்டாவது உலகப் போரின் முடிவில், தோற்ற ஜெர்மனியின் எதிர்காலத்தைப்பற்றி, ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன் ஆகிய மூன்று காட் டுத் தலைவர்களும் கூடிப் பேசிய இடம் இந்த பாட்ஸ்டாம் நகரமே. இங்குள்ள மாளிகை ஒன்றில: மூவரும் கூடி எடுத்த முடிவின் பலனே, இன்று உருவாகியுள்ள கிழக்கு ஜெர்மனியாகும். எனவே புதிய ஜெர்மனியின்-உலக வழக்கில் கிழக்கு ஜெர் மனியின்-அரசியல் சட்டப்படி, ஜெர்மனிய ஜன நாயகக் குடியரசின்-வரலாறு தொடங்குமிடம் இக் நகரமே. எனவே, வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு இக்ககரையும் இங்குள்ள மாளி கைகளையும் காட்டுவது வழக்கம்.'