பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நெடுங்காலமாக இருந்த, பழைய வரலாருேடு தொடர்புடைய கட்டடங்களைப் புதுப் பி.க்கு ம் போது, பழைய தோற்றமே கொடுக்கும்படி கட்டு வதே அவர்கள் முடிவு' என்று சொன்னர். இது சரியான முடிவாகவே எனக்குத் தோன்றிற்று. உங்களுக்கு எப்படியோ? டவுன்ஹாலைத் தாண்டிய சில நிமிடங்களில் பெரிய சோலை ஒன்றுக்குள் நுழைந்தது கார். சோலைக்குள், நல்ல தார் போட்ட சாலை. பறந்தது, கார். சோலையின் நடுவில் பெரியதொரு வீட்டின் முன்னே வந்து சேர்ந்தோம். வீட்டின் ஒர் பக்கம் பேருந்து வண்டிகள் பல கின்றுகொண்டிருந்தன. மறுபக்கம் ஏராளமான கார்கள். கார்கள் நின்ற பக்கம், காலியிடமொன்றைக் கண்டுபிடித்து, அங்கே காரை கிறுத்திப் பூட்டினர். வீட்டின் வெளியே பெருங்கூட்டம். உள்ளே யும் அப்படி என்பது உள்ளே சென்ற பிறகு தெரிந்தது. == * == கூட்டத்தைக் கவனித்தேன். பல்வேறு காட் டவர்களின் சாயல்களைக் கண்டேன். ஜெர்மனியர் மட்டுமல்லாது, பிற நாட்டவர்களும் கூட்டம் கூட் டமாக வந்து போவதாகத் தோன்றிற்று. வார விடுமுறைகளாகிய, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், பல நாட்டவர்களும் ஏராளமாக வந்து போவதாகச் சொன்னர். செக்கோஸ்லாவா கியா, போலந்து ஆகிய இரண்டும் கிழக்கு ஜெர்ம