பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கடுமையான உலகப் போரின் போது பட்டத்திள வரசர் அங்கே குடிபுகுந்தார். கடுமையான போரின் போது, இத்தனை ஆடம்பரமா என்று கனல் கக்க ஒருவர் ஆங்கிலத்தில் கூறினது என் காதில் வீழ்ந்தது. 'சிர மறுத்தல் வேங்தருக்குப் பொழுதுபோக்கு; நமக்கோ உயிரின்வாதை’ என்று பாரதிதாசன் பாடியதை நினைவுபடுத்திக் கொண்டு நகர்ந்தேன். எண்பது இலட்சம் ஜெர்மன் மார்க்குகள் செலவு செய்து கட்டிய இம்மாளிகையைக் காலிசெய்து விட்டு, ஏராளமான பொன்னேயும் பொருளையும் எடுத்துக்கொண்டு, இந்நூற்ருண்டின் நாற்பத் தைந்தாம் ஆண்டு, இளவரசர், மேற்கு ஜெர்மனிக்கு ஓடிவிட்டார் என்று கேள்விப்பட்டோம். “மன்னர்களின் ஆட்டம் மக்கள் திண்டாட்டம்' என்ற எண்னத்தோடு மாளிகையை விட்டு, மக்கள் மத்தியில் சென்ருேம்,