பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 உதகை, கொடைக்கானல் ஆகிய இடங்களில், கோடையில், வெய்யில் காய்ந்து கொண்டிருக்கை யிலேயே, சடசடவென்று மழை கொட்டுவது போல், அங்கேயும் பெய்தது. கிழக்கு ஜெர்மனியக் குடும்பங்கள் பெருமள விற்கு நவின மின்சாரக் கருவிகளை வைத்திருப் பதைக் கேள்விப்படுகிற உங்களுக்கு, அவர்கள் மாத வருவாய் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள அவா எழும். எனக்கு அந்த விருப்பம் ஏற் பட்டது. கிழக்கு ஜெர்மனியில் ஆண்களைப் போலவே பெண்களும் தொழில் புரிந்து சம்பாதிக்கிருர்கள். கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து, குறைந்தது மாதம் 1000 மார்க்குகள் சம்பாதிப்பார்கள். கிழக்கு ஜெர்மனி மார்க்கின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு ரூபாய்கள். அவர்களுக்கு வருமான வரி உண்டா? உண்டு. அதோடு ஒவ்வொருவரும், மாதங்தோறும் சமூகப் பாதுகாப்பு சக்தா கட்டவேண்டும். அது சாதா ரணமாக நூற்றுக்கு பத்து விழுக்காடு இருக்கும். ஆனல் யாரும் அறுபது மார்க்குக்கு மேல் கட்டத் தேவையில்லை. கோய்வாய்ப்பட்டால், மருத்துவம் பார்ப்பதற் கும் மருந்து செலவிற்கும் வேண்டிய பணத்தை சமூகப் பாதுகாப்பு நிதி'யிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.