பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 விட்டு விடுவார்களோ என்று ஐயம் என்னுள் எழுந்தது. அதை வெளிப்படுத்தினேன். பதில் கிடைத்தது. அதிலிருந்து, சமதர்ம சமுதாய மக் கள், ஊதாரிகள் அல்லர், என்பது தெரிந்தது. கிழக்கு ஜெர்மன் மக்கள் ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எழுபதாம் ஆண்டில் வங்கி சேமிப்பில் வைத்திருந்த பணம் சராசரி ஆளுக்கு மூவாயிரம் மார்க்குகளாகும். அதாவது ஆருயிரம் ரூபாய் களுக்கு மேலாகும். இவ்வளவுதான? இது போதுமா என்று தோன்றும். இலவச மருத்துவ வசதிக்கும், ஒய்வுகால ஊதி யத்திற்கும், பாதுகாப்பிற்கும், ஆண்டு தோறும் விடுமுறைச் செலவிற்கும், இலவசக் கல்விக்கும், நம்பகமான ஏற்பாடு செய்துவிட்டு, விலைவாசியும் ஏருமல் பார்த்துக் கொள்ளும்போது, இது அவ் வளவு குறைந்த சேமிப்பல்ல என்பது தெளி வாகும். மூவாயிரம் மார்க் சராசரி சேமிப்பு. சம்பா திக்கும் வயது வராத சிறுவர் சிறுமியர் எண்ணிக் கையும் ஒய்வுகால ஊதியம் பெறுவோர் எண்ணிக் கையும் சேர்த்து வகுத்தால் வருவது, இந்த சரா சரி சேமிப்பு. உழைக்கும் வயதினரை மட்டும் கணக்கில் கொண்டு பார்த்தால் இச் சேமிப்பு முன்று பங்காக இருக்கும். சேர்த்த பணத்தைக் கொண்டு வீடு வாங்க முடியுமா என்று கேட்டேன். 1915–3