பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

புதிய ஜெர்மனியில், பள்ளிக்கூடப் படிப்பு

பத்தாண்டு காலம் அந்த பத்தாண்டுப் படிப்பும் கட்டாயப் படிப்பு’ என்ருர். அடுத்த கேள்வி. 'பத்தாண்டு படிப்பும் இலவசமா? ஆம்; இலவசம், பள்ளிக்கூடப் படிப்பு மட்டுமல்ல; அதற்கு மேற்பட்ட படிப்பும் இலவசமே. எங்த கிலேக் கல்விக்கும் சம்பளம் கட்டத் தேவையில்லே’ என்று எடுத்துரைத்தார். "கல்விக்கூடங்களே யார் நடத்துகிருர்கள்?" என்ற விளு எழுந்தது. "எல்லா கல்விக்கூடங்களும் அரசுடமை. தனி யார் கல்விக்கூடங்கள் இல்லை. சமயச் சார்பிலும் கல்விக்கூடங்கள் இல்லை. எனவே செல்வர்களுக்கு அல்லது சில சமயப் பிரிவினருக்கு சிறப்பான கல்வி; ஏழைகளுக்கு கஞ்சித் தண்ணி கல்வி என்ற கிலை இல்லை." இப்பதிலைக் கேட்டதும், பழைய கிலே எப்படி என்று அறிய விரும்பினுேம் அறிந்ததைக் கூறு கிறேன். உலகப் போருக்கு முந்திய காலத்தில், ஜெர் மனியில், எல்லோருக்கும் கல்வி, தரமான கல்வி என்ற முறை இல்லை. செல்வம் படைத்தவர்கள், வசதிகள் படைத்த தனியார் கல்விக்கூடங்களில், உயர்வான கல்வி பெற்ருர்கள், பொதுமக்களோ.