பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 சென்றதால், உலகத்திற்கும் துன்பம். ஜெர்மனிக் கும் காசம். புதிய ஜெர்மனி தோன்றியதும் உடனடியாகச் செய்த வேலை, கல்விச் சீரமைப்பே.எல்லாக் கல்விக் கூடங்களையும் அரசுடமையாக்கி, எல்லாக் கல்விக் கூடங்களுக்கும் ஒரே வகையான பாட திட்டத்தை கடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். வசதிகள் படைத்த நகரக் கல்விக்கூடங்கள் கடத்தக் கூடிய அதே பாடத் திட்டத்தை சிற்றுார் பள்ளிகளும் கடத்துவதற்கு, அவைகளின் வசதி களைப் பெருக்க வேண்டுமல்லவா? அப்படியே செய்தார்கள். இன்று, ஒராசிரியர் பள்ளியே இல்லை, என்று தெரிந்து கொண்டோம். கல்வி என்பது திகைக்க வைக்கும் சர்க்கஸ் வித்தையல்ல. வாழ்க்கைக்கு வேண்டிய, பொது அறிவையும் நுட்ப அறிவையும் சமுதாயத்தில், தொண்டு செய்யும் கற்குடிமகனுக வாழ்வதற்கு வேண்டிய மனப்போக்கையும் வேலைப் பயிற்சியை யும் கொடுப்பதே கல்வி. எனவே, புதிய ஜெர்மனி யில், முதல் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்பு முடிய வேலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் கள். ஆறு வகுப்புகள் முடிய, பள்ளிக்கூடத்தில், வேலைப்பயிற்சியினை எல்லா மாணவ மாணவி களும் பெறுவார்கள். ஏழாவது முதல் பத்தாவது முடிய நான்கு ஆண்டுகாலம், பெறும் பயிற்சியோ, யதார்த்த தொழிற் சூழ்நிலையில் இருக்கும்.