பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 'செர்ப் இனத்தவர்கள் வாழ்கிருர்கள். அவர்கள் கன்மைக்காக, இப்பகுதியில் செர்ப் மொழி,விருப்ப மொழியாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அச் சிறுபான்மையினருடைய மொழியையே பாட மொழியாகக் கொண்ட தொடர் உயிர்கிலேப் பள்ளி யொன்றும் நடக்கிறது. சிறுபான்மையினருக்கு பொதுமக்கள் ஆதரவு உண்டா? மொத்தம் நூற்று எண்ப து உறுப்பினர்களைக் கொண்ட காட்பஸ் கெளண்டி மன்றத்தில் பதி னெட்டு சிறுபான்மையினர் உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களுக்கென் று தனி ஒதுக்கீடு இல்லாவிட்டாலும், பொதுமக்களுடைய நம்பிக் கையைப் பெற்றிருப்பதால், இத்தனை பேர் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுகிருர்களாம். நாடாளும் அமைப்புகளைத் தெரிந்து கொண்ட காங்கள், அன்று பிற்பகல், காட்பஸ் நகரத்தில் கட்டப்பட்டுள்ள புதுமாடிக் கட்டடங்களைக் கானச் சென்ருேம். புற நகர் முழுவதிலும் எண்ணற்ற புதுமாடிக் கட்டடங்கள் எழும்பியுள்ளன. ஒவ்வோர் மாடியி லும் பல விடுகள். சில வீடுகளில் ஒரே படுக்கை யறை இருக்கும். சிலவற்றில் இரண்டு படுக்கை யறைகள் உள்ளன. வேறு சில மூன்று படுக்கை யறைகள் கொண்டதாக இருக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒரு படுக்கையறை வீட்டையோ பல படுக்கை