பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தோம். நம் காட்டில், அத்தகைய குழங்தைகள் நம் கண்ணில் பட்டால், பெற்ருேர் நாள்தோறும் மிள காய் வற்றல் சுற்றிப் போட நேரிடும்! வீட்டைப் பார்த்துவிட்டு நீச்சல் குளத்திற்குச் சென்ருேம். அதுவும் காட்பஸ் நகரத்தை ஒட்டியே இருந்தது. நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் நீங்தி விளையாடியும், மணல் மேல் கிடங்து, வெய் யில் காய்ந்தும் மகிழ்ந்து கொண்டிருந்த காட்சி, கண்கொள்ளாக் காட்சி. அக்காட்சியில், சில கி.மி டங்கள் சிங்தனை மறந்திருந்தேன். "இந்த நீச்சல் குளம் எப்படி உருவாயிற்று என்று கேளுங்கள்' என்ற குரல் கேட்டது. "எங்கள் காட்டில் சிற்றுாரிலும் சரி பேரூரிலும் சரி, கண்டபக்கம் மண்ணுே மணலோ தோண்டி எடுக்க முடியாது. அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே தோண்டலாம். இங்ாகரத்தில் புதி தாகக் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மாடி விடுகளுக்குத் தேவையான, கலவை மணலை இங்கே தோண்டினர்கள். அது பெரும் பள்ளமா யிற்று; பரவலான பள்ளமுமாயிற்று. அதன் கரைகளையும் சார2லயும் ஒழுங்குபடுத்தி கல்ல இயற்கை நீச்சல் குளம் போல் செய்து விட்டோம்: விட்டு வசதி திட்டத்தோடு குளம் அமைக்கும் திட்டமும் இணைங்து விட்டது. இந்த இணைத்துத் திட்டமிடும் போக்கை பல துறையிலும் காண லாம்' என்ருர்,