பக்கம்:புதிய தமிழகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புதிய தமிழகம்

களேயே அரசாங்கம் அமர்த்திக்கொள்ளல் வேண்டும். தமிழின் தூய்மையைப் பாதுகாக்கும் முறையில் அக் குழு அமைக்கப்பட வேண்டும். எக்கட்சி நாட்டை ஆளி லும் மொழி பற்றிய சிக்கலில் இக்குழுவின் தீர்ப்பே முடிவானதாக இருத்தல் வேண்டும். புதிய தமிழகத் திற்கு இக்குழு மிக மிக இன்றியமையாத தாகும். உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் தமிழருக்குக் குழி தோண்டும் கீழ்மக்கள் இக்குழுவில் இடம் பெறக் கூடாது.

அறிவுடைக் கல்வி

நாட்டு மக்களுக்கு இன்று தேவைப்படுவது விஞ் ஞான மனப்பான்மையை வளர்க்கும் கல்வியேயாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வரும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்தாத கட்டுக் கதைகளைக்கொண்ட மூடநம்பிக்கைகளே ஊட்டி வளர்க் கும் பாடங்களேக் கொண்ட பாடத் திட்டங்கள் மாய்க் தொழிதல் வேண்டும். கல்வி கற்கும் சிறுவர்களுக்குத் தங்கள் நாடு, தங்கள் சமுதாய அறிவு தங்கள் நாட்டி லேயே தாங்கள் முன்னேறுதற்குரிய வழி வகைகள், பிறநாட்டு இளைஞர்கள் கல்வித்துறையிலும், பித துறை யிலும் முன்னேறும் விவரங்கள், பயிர்த்தொழில், கைத் தொழில், வாணிகம் பற்றிய விளக்கங்கள், அறிவுத் துறை, கலேத்துறை, சமயத்துறை பற்றிய செய்திகள்இவை பற்றிய பாடங்களைக் கொண்ட பாடத் திட்டம் விஞ்ஞான அடிப்படையில் அமைத்தல் வேண்டும். இப் பலதுறைப்பட்ட பொருள்களைப் பற்றிய பாடங்கள் தூய, எளிய, செந்தமிழ் நடையில் எழுதப்படவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/10&oldid=999957" இலிருந்து மீள்விக்கப்பட்டது