பக்கம்:புதிய தமிழகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ்

சங்க காலத்தில்

கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே நாடகத்தை யும் நடனத்தையும் கூத்தர் என்பவர் பேணி வளர்த னர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர்; உள்ளக் குறிப்புப் புறத்தில் தோன்றும்படி திறம்பட நடிப்பவள் விறலி எனப்பட்டாள். கூத்தி, ஆடுமகள், ஆடுகளமகள் என நடனமாடிய மகள் சங்ககாலத்தில் பல பெயர்களைப் பெற்றிருந்தாள். நடனமாடிய மகன் கூத்தன், ஆடுமகன், ஆடுகளமகன் என்று பெயர் பெற்றன். இவர்களே கதை தழுவிவரும் கூத்துக்களை ஆடினர். அங்கனம் ஆடிய பொழுது ஆண் மகன் 'பொருநன்’ என்றும் பெயர் பெற்ருன்.

தமிழ் தொன்று தொட்டு இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளைப் பெற்றிருந்தது. கூத்த நூல், செயிற்றியம், பரதம், முறுவல், அகத்தியம், சயந்தம், குணநூல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்பன சங்ககால நாடக நூல்கள் என்று உரைகளால் அறி கின்ருேம். இவையெல்லாம் அழிந்து விட்டன. சிலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/12&oldid=999949" இலிருந்து மீள்விக்கப்பட்டது