பக்கம்:புதிய தமிழகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புதிய தமிழகம்

இரண்டும் கலக்கின்றன. நாடகத்தில்தான் முத்த மிழையும் ஒருங்கே காண இயலும்,

கோவில் விழாக்களில்தான் நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக முதலில் நாடகம் அமைந்திருந்தது.பின்பு பாட்டாக அமைந்த உரைநடை இடையிடையே கலந்தது. அதன் பின்னர்ப் பேச்சு நடையில் அமைந்த உரை நடை சேர்ந்தது. எனவே, ஆடல், பாடல், பாடல் வடிவில் அமைந்த உரை நடை, பேச்சு உரை நடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன. இங்கனம் வளரத் தலைப்பட்ட நாட கம், பொதுமக்களுக்கென்றும் அரசர்க்கு என்றும் இருவகையாகப் பிரிந்தது. அவை .ே வ த் தி ய ல் ' 'பொதுவியல்' எனப்பட்டன.

நாடகம் என் முறையில் வளர்ந்து வந்தபொழுது, இந் நாட்டில் வந்து தங்கி செல்வாக்குப் பெற்ற ஆரிய ரும், சமணரும் நாடகம், காமத்தை மிகுதிப் படுத்துவ தென்று தவருக எண்ணினர்; அதனல் தாம் செய்த நூல்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர். அவர்கள் செல்வாக்கு மிகுதிப்பட்டிருந்த காலத்தில் நாடகத்தமிழை வளர ஒட்டாது தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்படியாகக் குறைந்தது. 8

இடைக் காலத்தில் கி. பி. 7-ஆம் நூற்றுண்டில் மகேந்திர பல்லவன் மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வேடிக்கை நாட

$ வி. கோ. சூ. தமிழ் மொழியின் வரலாறு. பக். 45.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/14&oldid=641886" இலிருந்து மீள்விக்கப்பட்டது