பக்கம்:புதிய தமிழகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:20 புதிய தமிழகம்

20-ஆம் நூற்ருண்டில்

நாம் வாழும் இவ்விருபத்ாம் நூற்ருண்டின் முற் பாதியில் நாடகக் கலை நன்கு வளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் எழுதியுள்ள பல நாடகங்கள் நாடெங்கும் நடிக் கப் பெற்ற்ன். சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் பலவாகும். அவற் றுள் அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிர புலிங்கலீலை, வள்ளி திருமணம், பாதுகாபட்டாபிஷே கம், இலங்காதகனம், அல்லி அர்ச்சு,ை சிறுத்தொண் டர், சதிஅனுசூயா, பவளக்கொடி, சதி சுலோசன, மணிமேகல்ை, மிருச்சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவ லன், பிரகலாதன், ரோமியோவும் ஜூலியத்தும் என் பன குறிப்பிடத்தக்கவை.

கண்ணேய (நாயுடு) நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ண லீலே, தசாவதாரம் முதலிய நாடகங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சிறந்து விளங்

கின. -

இந் நூற்றண்டின் முற்பாதியில் சங்கரதாஸ் சுவாமிகள் இண்யற்ற நாடக ஆசிரியராக இலங்கினர். இவருடைய மாணவர்கள் தமிழகம் முழுவதும் பரவி யிருக்கின்றனர். அவர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு இக் கல்ையைக் கமால் இயலும் அளவு வளர்த்து வரு கின்றனர்.தழிழ் வளர்த்த மதுரையில் இவருடைய மாணவர்கள் சங்கங்களே. அமைத்து நாடகப் பயிற்சி அளிக்கின்றனர்; மதுரை, இராமநாதபுரம், திருச்சி மாவட்ட ஊர்களில் நாடகங்களை நடித்து வரு கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/20&oldid=641892" இலிருந்து மீள்விக்கப்பட்டது