பக்கம்:புதிய தமிழகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனார்

21


சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்களாகிய 4. கே. சண்முகம் சகோதரர்கள் இன்றைய நாடகத் துறை யிலும் நடிப்புக் கலையிலும் சிறந்து விளங்குகின்றனர். அக் கலைக் கேற்ற ஒழுக்கமும் அவர்கள் பால் அமைக் துள்ளமை குறிப்பிடத்தகும். அவர்கள் நடித்துவரும் நாடகங்களுள் அவ்வையார், மனிதன், இன்ஸ்பெக்டர், இராசராச சோழன் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள்ளும் இராசராச சோழன் இணையற்ற நாடகமா கும். காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் மிகச் சிறந்த நாடகம் என்று இதனைக் கூறலாம். சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்றுள்ள இந்நாடகம், மக்களுக்கு வரலாற்று உணர்ச்சியையும் பக்தியையும் ஒருங்கே ஊட்டவல்லது. இது போன்ற நாடகங்கள் பல வரையப் பெற்று நடிக் கப் பெறுதல் வேண்டும். தவாபு இராசமாணிக்கத்தின் குழு வினர் வள்ளி திருமணம், சம்பூர்ண இராமாயணம் முதலிய நாடகங்களை நடித்து வருகின்றனர்.

காலத்திற் கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்ட நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு வருகின்ற ன. என். எஸ். கிருஷ்ணன் 1. குழுவினர், எஸ். எஸ். இராசேந்திரன் குழுவினர், எம். ஜி. இராமச்சந்திரன் குழுவினர், கே. ஆர். இராமசாமி குழுவினர், கே. ஏ. தங்கவேலு குழு வினர், சிவாஜி கணேசன் குழுவினர் முதலியோர் பயன் தரத்தக்க நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

  • கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் மறைந்தது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/21&oldid=1231028" இலிருந்து மீள்விக்கப்பட்டது