பக்கம்:புதிய தமிழகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு உண்டாக்கிய நாட்டுப் பிரிவுகள்

கடல்கோள்கள்

மிகப் பழைய காலத்தில் தமிழகம் இன்றுள்ள இலங்கைத் தீவை தன்னகத்தே பெற்றிருந்த பெரு நிலப் பரப்பை குமரி முனேக்கு தென் பால் பெற்றிருங் தது என்றும் அப்பகுதி ஏழ்தெங்க நாடு, ஏழ்பனே நாடு முதலிய நாற்பத்தொன்பது நாடுகளை உடையதாக இருந்தது என்றும் அந் நிலப் பரப்பில் குமரிமலைத் தொடர் இருந்தது என்றும் அம்மலையிலிருந்து குமரி யாறு அப்பெரு நிலப் பரப்பில் பாய்ந்தது என்றும் ஒரு பெருங் கடல் கோளால் அந் நாடுகளும் குமரி மலே யும் கடலுள் ஆழ்ந்தன என்றும் பழைய தமிழ் நூல் கள் சொல்லுகின்றன. ஒரு பெரிய கடல்கோள் ஏறத் தாழ கி. மு. 2800 ல் நிகழ்ந்தது என்றும் அப்பொழுது இலங்கை இந்தியாவினின்று பி ரிங் த து என்றும் இலங்கை வரலாறு கூறுகிறது. அக் கடல்கோளே குமரி நாட்டை அழுத்தியிருக்கலாம்.

அக் கடல் கோளுக்குப் பிறகு குமரியாறும் அது பாயப்பெற்ற நிலப் பகுதியும் தமிழகத்தின் தெற் கெல்லையாகக் கூறப்பெற்றன. பல நூற்ருண்டுகளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/24&oldid=641896" இலிருந்து மீள்விக்கப்பட்டது