பக்கம்:புதிய தமிழகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புதிய ಝಿಹರ

மேலே கூறப்பட்ட செய்திகளைக் கொண்டு தெளிய லாம். இந்த நிலை ஏறத்தாழ கி. பி. 16-ஆம் நூற்றண்டு வரையில் இருந்ததால் இதற்கிடையில் மலையாளத்தில் பேசப்பட்டு வந்த பழந்தமிழ், கில அமைப்பால் தனித்து வழங்கலாயிற்று. அங்குக் குடியேறிய ஆரியர்கள் ஆதிக்கத்தால் பழந்தமிழ் தன் செல்வாக்கை இழந்தது; படிப்படியாக வடமொழிக்கு அடிமையாகி கொடுத்தமிழ் என்று பிற தமிழ் நாட்டு மக்களால் பெயர் வழங்கப் பட்டது. தமிழும் வட மொழியும் கலந்த அக் கொடுங் தமிழே நாளடைவில் மலையாளம் என்ற பெயர் பெற்றது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் அமைப்பால் சோழ, பாண்டிய நாட்டு மக்கள் சேரநாட்டு மக்களோடு நெருங் கிய தொடர்பு கொள்ள வழியில்லை. எனவே அங்காடு தனித்து இயங்க வேண்டிய கிலேயிலிருந்தது. ஆரியர் செல்வாக்கால் அங்காட்டு மொழி, பழக்க வழக்கங்கள் இன்ன பிறவும் முற்றிலும் மாறுபட்டு வி ட் - ன. எனவே கி. பி. 17 ஆம் நூற்ருண்டிலிருந்து தமிழகத் தின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலையெனவே கூற வேண்டியதாயிற்று. مسیر -

வட எல்லையில் மாறுதல்

விசய நகர ஆட்சிக் காலத்தில் கன்னடரும் தெலுங்கரும் முசுலிம்களின் படையெடுப்பால் தாக் குண்டு தெற்கு நோக்கி ஓடிவந்தனர்; திருப்பதி முதலிய தமிழகத்து வட பகுதிகளில் மிகுதியாகக் குடியேறினர். அக் குடியேற்றம் வரவர மிகுதிப்பட்டது. அதன் விளை வால் திருப்பதியைத் தன்னகத்தே கொண்ட சித்துளர் மாவட்டம், நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி, செங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/26&oldid=641898" இலிருந்து மீள்விக்கப்பட்டது