பக்கம்:புதிய தமிழகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 27

கற்பட்டு மாவட்டத்தின் வட பகுதி, வட ஆற்காடு மாவட்டத்தின் வடபகுதி என்பவை தெலுங்கும் கன்ன டமும் பேசப்படும் மக்களே மிகுதியாகக் கொண்டுள்ள பகுதிகளாக மாறிவிட்டன. அண்மையில் மொழிவாரி மகாணம் பிரிக்கவேண்டிய கிலேவந்தபொழுது பிற மொழி மக்களே மிகுதியாகப் பெற்ற இத் தமிழகப் பகுதிகள் தெலுங்கு நாட்டுடனும் கன்னட நாட்டுடனும் சேர்க்க வேண்டிய துன்பத்தைப் பெற்றன. இதன் காரணமாக, இன்றைய தமிழகத்தின் வட எல்லே வேங் கடம் என்று கூற முடியவில்லை. வேங்கடம் 18 ஆம் நூற்ருண்டு வரையில் தமிழ் நாட்டைச் சார்ந்தது என்று கல் வெட்டுக்களும் கூறுகின்றன.

~ooxe:oళిళా

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/27&oldid=641899" இலிருந்து மீள்விக்கப்பட்டது