பக்கம்:புதிய தமிழகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனூர் 29

மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னருள் பூதப்பாண்டியன் என்பவன் ஒருவன். இப் பூதப்பாண்டியன் மீது பகை யரசர் படையெடுக்கத் துணிந்தனர். அதனேக் கேள்வி யுற்ற பாண்டியன் மிக்க சீற்றம் கொண்டான். அவ் வேந்தர் பெருமான் தனது அவைக் களத்தில் இருந் தோரைப் பார்த்து,

  • பகை வேந்தர் ஒன்று சேர்ந்து என்னேடு போர் புரிவதாகச் சொல்லுகின்றனர். அவர்கள் மி க் க படையையுடையவர்கள்; சிங்கம் போலச் சினந்து புறங் கொடாத மன வலிமை யுடையவர்கள், கடும் போரில் நான் அவர்களே வெல்வேன். அங்ஙனம் நான் அவர் களை வெல்லேனுயின், என் மனைவியைவிட்டு நான் பிரிங் தவேைவன்; ஆகக் கடவேன். அறநெறி மாறுபடாத அறங்கடறவையத்தில் அறநெறி அறியாத ஒருவனே வைத்து நீதி பிழைக்கச் செய்த கொடியவன் ஆகுக. மாவன், ஆந்தை, அந்துவன், சாத்தன், ஆதன், அழிசி, இயக்கன் என்பவரும் பிறருமாகிய என் உயிர் நண் பாைவிட்டும், பல உயிர்களையும் பாதுகாக்கும் அரசர் குலத்தில் பிறவாதும் மாறிப்பிறப்பேனுகுக,” என்று சூள் உரைத்தான். W.

இச் சூளுரையிலிருந்து நாம் பாண்டியனைப் பற்றி அறிவன யாவை?

1. இப் பெருமகன் தன் மனேவி மீது நீங்காத அன்புடையவன்-அவளே விட்டுப் பிரிய மனமில்லாத வன் என்பன நன்கு புலனுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/29&oldid=641901" இலிருந்து மீள்விக்கப்பட்டது