பக்கம்:புதிய தமிழகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 35

இயலாது. ஆயினும், காட்டின் மொழியாகிய தமிழை நலமுறக் கற்பிக்க எண்ணிறந்த திண்ணப் பள்ளி களோ உயர்கிலேப் பள்ளிகளோ இருந்திருத்தல் வேண் டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இயற்றமிழ்ப் பள்ளிகள் மிகப் பலவாக இருந்திருத்தல் வேண்டும்; இசைத்தமிழ்ப் பள்ளிகள் பல இருந்திருத்தல் வேண் டும். இங்ஙனமே நாடகத் தமிழ்ப் பள்ளிகளும் நன்முறை யில் நடை பெற்றிருத்தல் வேண்டும். இவை இருந்திரா விடில், நானூற்றுக்கு மேற்பட்ட இயற்றமிழ்ப் புலவர் களையும் எண்ணிறந்த இசைவாணர்களையும் மிகப் பல ராகிய கூத்தரையும் சங்ககாலம் பெற்றிருக்க வழி

இயற்றமிழில் வ ல் ல புலவர்கள் எண்ணிறந்த இலக்கண நூ ல் க ளே யும் மி க ப் பல இலக்கிய நூல்களையும் கற்றவர். இசைத் தமிழ்ப் புல வ ராகிய பாணர்களும் பாடினியர்களும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளிலும் வல்லவராய் அக்காலத்தில் விளங்கிய சீறியாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் முதலிய பல வகை யாழ்களையும் வாசிக்கும் திறன் வாய்ந்தவராய் விளங்கினர். அக்காலத் தமிழிசை பற்றிய செய்திகள் மிகப்பலவாகும். இன்றுள்ள சிலப்பதிகாரம் முதலிய நூல் உரைகளில் இவை பற்றிய செய்திகள் இருத்தலே நோக்க மிகப் பல இசை நூல்கள் அக்காலத்தில் இருந் திருத்தல் வேண்டு மென்பது ஐயமற விளங்குகின்றது. உள்ளக் கருத்தை உடற் குறிப்புகளால் காண்போர்க்கு உணர்த்துவது நடனமும் நாடகமும் ஆகும். இக்கலையில் வல்லவர் கூத்தர், கூத்தியர் எனப் பட்டனர். இக்கலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/35&oldid=641907" இலிருந்து மீள்விக்கப்பட்டது