பக்கம்:புதிய தமிழகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புதிய தமிழகம்

பற்றியும் பல நூல்கள் தமிழகத்தில் இருந்தன என்பது இன்றுள்ள சங்கத் தமிழ் நூல்களால் அறியப் படுகின் றது. உள்ளக் குறிப்பை வெளியில் தெரியும்படி நடிப் பதில் விறல் படைத்தவள் விறலி எனப்பட்டாள்.

தமிழ் வளர்ந்த முறை

படித்துப் புலமை பெற்ற புலவர் பலர் பள்ளி ஆசி ரியர்களாய் அமைந்தனர். வேறு பலர் முடிமன்னர் அவைகளிலும் சிற்றரசர் அவைகளிலும் அவைப் புலவ ாாக அமர்ந்தனர். பின்னும் பலர், ஊர்தோறும் சென்று பேரிகை கொட்டி வாணிகம் நடாத்திய பேரிசெட்டிமார் போலவும், பழமரம் நாடிச் செல்லும் பறவைகளே போலவும் தமிழைப் பேணி வளர்த்த தகை சான்ற மன்னர்களை நாடிச் சென்று, தம் புலமையை வெளிப்படுத்தி, அவர் கந்த பரிசினைப் பெற்றுவாழ்ந்து வந்தனர். அப்பரிசில் பேர்ந்தவுடன் பிற மன்னர்பால் சென்று தம் புகழ் கிறுவிப் பரிசு பெற்று மீண்டு வந் தனர். இத்தகைய புலவர் பெருமக்கள் பாடியனவே சங்க கால்ப் பாடல்கள்.

போர்க்களத்தில் வெற்றி பெற்ற அரசர்களைப் புல வரும் பாணரும் கூத்தரும் சென்று பாடுதல் மரபு. விறல் வேந்தர் அம்முத்தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி அவர் மனம் மகிழும்படி பரிசளித்தல் வழக்கம். சேரன், சோழன் என்னும் முடியுடை அரசர் இருவரையும் அவ ரோடு இணேந்து வந்த பெருவேளிர் ஐவரையும் தலையா லங்கானத்தில் முறியடித்த பாண்டியன் நெடுஞ்செழி யனேக் கல்லாடனர், மாங்குடிகிழார், இடைக்குன்றுரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/36&oldid=641908" இலிருந்து மீள்விக்கப்பட்டது