பக்கம்:புதிய தமிழகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 37

கிழார் என்ற புலவர் பெருமக்கள் உளமாரப் புகழ்ந்து பாராட்டியுள்ள பாடல்களைப் புறநானூற்றில் காண லாம். வேந்தர்களது வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும், குணநலன்களையும் புலவர்கள் பாராட்டிப் பரிசு பெற்றனர். அங்ஙனமே தக்ககாலங்களில் அவர் களுக்கு அரிய அறிவுரைகளைக் கூறினர். அவர்தம் அறிவுரைகளைப் பாராட்டிய வேந்தர்கள் அவர்களுக்கு மனமுவந்து பரிசளித்தனர். அரசர் இருவருக்குள் போர் நிகழ இருக்கலே உணர்ந்து, அப்போர் நடை பெருமற் காத்த புலவர்களும் உண்டு. அப்புலவர் பெரு மக்களும் பரிசில்பெற்றனர். ஆட்சி முறையிலும் தனிப் பட்ட வாழ்க்கை முறையிலும் அரசர்க்கு அறிவுரை கூறிய அருந்தமிழ்ப் புலவர்களும் அக்காலத்தில் வாழ்ந் தனர். தன் மனைவியைத் துறந்த பேகனுக்குக் கபிலர் பாணர் முதலிய சான்ருேர் அறிவுரை பகன்றனர் என்பதைப் புற நானூற்றில் காணலாம். தம் மன்ன ைேடு போர்க்களம் புகுந்து, அவனே அவ்வப்போது ஊக்கப்படுத்தி, அவைேடு இன்புற்றும் துன்புற்றும் வாழ்ந்த புலவர்களும் உண்டு. கபிலரும் ஒளவையாரும் இத்துறைக் கேற்ற சான்ருவர்.

‘புலமை புலமைக்காகவே என்பது பண்டைக் காலக் குறிக்கோளாகும். மருத்துவர், கொல்லர், கூல வாணிகர், பேரிகை அடித்து வாணிகம் செய்தவர், வள மனையைப் பாதுகாத்த காவற்பெண்டிர், குயத்தியர், குறத்தியர் முதலிய பலரும் த த் தம் தொழில்களைச் செய்து கொண்டே பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் மக்களிடம் காணப்பட்ட வீரம், கொடை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/37&oldid=641909" இலிருந்து மீள்விக்கப்பட்டது