பக்கம்:புதிய தமிழகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புதிய தமிழகம்

கொற்கை நகரம் சங்கநூல்களில் பேசப்படுதலால், அதன் பழைமையை நாம் நன்கு உணரலாம். கி.பி. முதல் நூற்றண்டில் தென்இந்தியக் கரையோரமாக வந்த பெரிப்ளுஸ் என்ற பிரயாண நூலின் ஆசிரியரும், அடுத்த நூற்ருண்டில் வந்த தலாமியும் இப்பண்டை கக ரத்தைச் சிறந்த துறைமுக நகரம் என்று குறிப்பிட்டுள் ளனர்; குமரிமுனேயைச் சுற்றிவந்த கிரேக்க வணிகர் முதலில் இத்துறைமுகத்துக்குத்தான் வந்தனர் என்று குறித்துள்ளனர். மேலும், அவர்கள் மன்னர் வளைகுடா வைக் கொற்கை வளைகுடா என்றே குறித்துள்ளமை, அவர்கள் காலத்தில் கொற்கை பெற்றிருந்த பெருஞ் சிறப்பினே நன்கு விளக்குவதாகும்.

சங்க நூல்களிற் பாராட்டிப் பேசப் பெற்ற கொற் கைத் துறைமுகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே புகழ் பெற்றிருந்தது என்று கருதுதல் கவருகாது.

பாரசீகர், அரேபியர், பொனிஷியர், எத்யோப்பி யர், கிரேக்கர், உரோமர் போன்ற மேலே நாட்டவரும், பர்மியர், சீனர் முதலிய கீழை நாட்டவரும் வாணிகத் துறையில் கொற்கைத் துறைமுகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று ஆராய்ச்சியாளர் அறை கின்றனர். கொற்கைப் பெருந்துறை முத்தெடுக்கும் தொழிலிலும் சங்குகளே எடுத்துப் பொருள்களைத் தயா ரிப்பதிலும் பெயர் பெற்றிருந்தது. எனவே, முத்துக் களும் சங்குகளும் சங்கால் செய்யப் பெற்ற பலவகைப் பொருள்களும் மிக்க அளவில் அயல் நாடுகட்கு ஏற்று மதி யாயின. மேலும், தமிழ் காட்டிற் கிடைத்து வந்த தங்கம், யானைத்தந்தம், கருங்காலி, சந்தனம் முதலிய விலையுயர்ந்த மரங்கள், மணப் பொருள்கள், பட்டாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/40&oldid=641912" இலிருந்து மீள்விக்கப்பட்டது