பக்கம்:புதிய தமிழகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 41

பருத்தியாலும் இயன்ற ஆடைகள், அரிசி முதலியன அயல்நாடுகட்கு அனுப்பப்பட்டன.

f ஏறத்தாழக் கி. மு. 1400 இல் வாழ்ந்து வந்த அத் தீனிய அரசர்கள் இக் கடல் வாணிக உறவினுல் பாண் டியர்களே மதித்துப் போற்றினமைக்கு அறிகுறியாகப் பாண்டியோன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்ட னர். கருங் கடலின் கரையிற் கட்டப்பட்ட வாணிக நக ரங்களும் பாண்டியனது துறைமுகப்பட்டினத்தின் பெயரால் கொல்கீஸ்'(கொற்கை என வழங்கப் பெற்று வந்தன. பின் நூற்ருண்டுகளில் உரோமப் பேரரசர் களான அகஸ்டஸ், கிளாடியஸ், முதலியோர் பாண்டி வேந்தருடன் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண் டிருந்தனர்; பாண்டியர் அவைக்குத் தூதர்கள் மூலம் பரிசுப் பொருள்களே அனுப்பித் தங்கள் அன்பையும் நட்டையும் அறிவித்துக்கொண்டனர். -

'ஐரோப்பிய நாடுகட்கு மிகுதியான அரிசியை ஏற்றுமதி செய்த நகரம் பொருநைக் கரையில் இருந்த கொற்கையே யாகும். இத்தகைய வாணிகம் அக்காலத் தில் கிரேக்கர் வசம் இருந்தது. கிரேக்கர்க்கு முன்பு இந்திய வாணிகம் பாரசீகர், பொனிஷியர் என்பவரி டமே பெரும்பான்மை இருந்து வந்தது. தமிழ்ச் சொற் களாகிய தோகை, அரிசி இஞ்சி முதலியன ஹீப்ரு முதலிய மொழி நூல்களில் காணப்படுகின்றமை இப் பண்டைக் கடல் வாணிக உண்மையை வலியுறுத்துவ தாகும்,' என்று ஆராய்ச்சி அறிஞர் கூறுகின்றனர்.

சங்க காலத்திற்குப் பிறகு கொற்கை பெற்றிருந்த சிறப்பை நன்கு அறிவிக்கும் சான்றுகள் மிகுதியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/41&oldid=641913" இலிருந்து மீள்விக்கப்பட்டது