பக்கம்:புதிய தமிழகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புதிய தமிழகம்

இல்லே. பாண்டிய நாடு கி. பி. 6-ஆம் நூற்ருண்டு முதல் 10-ஆம் நூற்ருண்டு வரை பாண்டியர் ஆட்சியில் இருந் தது; பின்னர் ஏறத்தாழ முன்னுாறு வருட காலம் சோழராட்சியில் இருந்தது. அக்காலத்தில் பாண்டிய நாடு இராசராசப் பாண்டிய நாடு எனவும், கொற்கை சோழெந்திர சிம்ம சதுர்வேதிமங்கலம் எனவும் பெயர்களைப் பெற்றிருந்தன. அக்காலத்திற்முன் ஆட்சி மாறுபட்டா லும் முன்னர்க் கூறப் பெற்ற இயற்கைக் கேடுகளா லும் கொற்கை தன் பொலிவை இழந்துவிட்டது. கி. பி. 12-ஆம் நூற்ருண்டிற்குப் பின் வந்த பாண்டியர் காலத் தில் கொற்கையின் சிறப்பைக் காயல் துறை முகம் பெற்று விட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ்க்கரையில் ஏறத் தாழ நாற்பதாண்டுகள் தங்கிக் கிறிஸ்தவ சமயத் தொண்டு செய்தவரும், 'திராவிட மொழிகளின் ஒப்பி லக்கணம்' என்ற இணையற்ற நூலே எழுதி அழியாப் புகழ்பெற்றவருமான கால்டுவெல் ஐயர் சென்ற நூற்ருண் டில் இக் கொற்கையைப் பார்வையிட்டார்; ஆங்காங்குச் சில இடங்களைத் தோண்டி ஆராய்ச்சி நிகழ்த்தினர்; கொற்கையில் சங்குத் தொழிற்சாலை ஒன்று இருந் தமைக்குரிய அறிகுறிகளைக் கண்டார்; அங்குப் பல வகை நாணயங்கள் அவருக்குக் கிடைத்தன. அப்பெரி யார் வேலைப் பாடமைந்த பெரிய தாழிகள் பலவற்றைக் கண்டார்; அங்குள்ள அக்கசாலை என்னும் சிற்று ரைப் பார்வையிட்டு, அவ்விடத்தில் பண்டைப் பாண்டி யர் நாணயங்களைச் செய்துவந்தனர் என்ற கருத்தை வெளியிட்டார். நெல்லை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி களில் பழைய நாணயங்கள் மிகப் பலவாகக் கிடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/42&oldid=641914" இலிருந்து மீள்விக்கப்பட்டது